இலங்கை சவால்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும், அது மேலும் ஜனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் இன்று (04) தெரிவித்துள்ளார்.
கம்போடியாவில் ஆரம்பமான மாநாட்டின் போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை இலங்கை பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்