சஜித்திற்கு ஆதரவு : தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு!

Date:

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அதரவளிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்து வரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார்.

“தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழுவின் ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைய இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவையும் பூரண பங்களிப்பையும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது அரசியல் குழுவின் முடிவின்படி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம்.”

ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய காங்கிரஸ்
மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...