நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் ஒப்புதலுக்காக திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மாலை புதிய விலை குறித்து அறிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விலை திருத்தத்தின் போது எரிவாயு சிலிண்டர்களின் விலையில் குறைவு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை, திறைசேரி மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி விலை திருத்தம் செய்யப்படுகிறது.
அந்த சூத்திரத்தின் அடிப்படையில் நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கும் வரும் வகையில் விலை திருத்தத்தை மேற்கொள்வோம் என்று முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “லிட்ரோ நிறுவனம் நான் பொறுப்பேற்ற போது 14 மில்லிய ரூபா இழப்பு ஏற்பட்டது. எனினும், தற்போது லிட்ரோ நியாயமான லாபத்தை ஈட்டுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 22 நாட்களில் 2.87 மில்லியன் 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை லிட்ரோ லங்கா வழங்க முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.