Wednesday, April 24, 2024

Latest Posts

​வௌியானது நரேந்திர மோடியின் சொத்து விபரங்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் அசையும், அசையா சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.23 கோடி. இதில் பெரும்பாலானவை அசையும் சொத்தாக உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருப்பதாவது,

பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்ச் 31 2022 வரையில் அசையா சொத்துகள் ஏதும் இல்லை. குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்த நிலத்தை நன்கொடையாக வழங்கிவிட்டார். அசையும் சொத்துக்களாக அவரிடம் நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1.73 லட்சம்.
பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், பத்திரங்கள் போன்ற சொத்துகளில் பிரதமர் நரேந்திர மோடி முதலீடு செய்யவில்லை. சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை.

கடந்த ஆண்டு பிரதமரின் சொத்து மதிப்பு ரூ.26.13 லட்சம் இருந்த நிலையில், 2022 மார்ச் 31 வரை அவரது சொத்து மதிப்பு ரூ. 1.1 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் அவர் அசையா சொத்துக்கள் எதுவும் வாங்கவில்லை.தவிர அஞ்சலக சிறு சேமிப்பு திட்டமான தேசிய சேமிப்பு சான்றிதழில் ரூ.9,05,105 ரூபாய், மற்றும் ரூ.1,89,305 மதிப்புள்ள ஆயுள் காப்பீடு பாலிசிகளும் வைத்துள்ளார். கையில் ரொக்க பணமாக ரூ. 35,250 வைத்துள்ளார்.இதன் மூலம் 2022 மார்ச் 31ஆம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ. 2 கோடியே 23 லட்சத்து 82 ஆயிரத்து 504. இவ்வாறு பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியை தவிர , அமைச்சரவையில் உள்ள 29 மத்திய அமைச்சர்களும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.