எதிர்ப்புகளை மீறி இலங்கை நோக்கி வருகிறது சீனக் கப்பல்

0
143

இந்தியாவின் ஆட்சேபனையையும், இலங்கையின் கோரிக்கையை புறக்கணித்தும் சீனக் கப்பல் ‘யுவான் வான் 05’ இலங்கையை நோக்கி நகர்வதாக இந்திய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் தற்போது இந்தோனேசியாவின் கடற்பரப்பில் உள்ளதுடன் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாக இந்தியாவின் என்டிடிவி தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைவதற்காக நிலைநிறுத்தப்பட்டு வருவதாகவும், அது வியாழக்கிழமை காலை 09.30 மணியளவில் அம்பாந்தோட்டையை சென்றடையும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதன்காரணமாக கப்பலின் பயணத்தை தாமதப்படுத்துமாறு சீன அரசாங்கத்திடமும் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் இந்தியா தலையிடக் கூடாது என்றும், அணிசேராக் கொள்கையின்படி தனக்கு விருப்பமான எந்த நாட்டையும் கையாள்வதற்கு இலங்கைக்கு உரிமை உண்டு என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here