ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதவி நீக்கப்பட்ட நிலையில் வெற்றிடமாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள புதிய உறுப்பினர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
மனுஷ நாணயக்கார 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட விருப்பு வாக்கு பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
அதன்படி, வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு விருப்பு வாக்கு பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற்ற பந்துலால் பண்டாரிகொட பாராளுமன்றம் பிரவேசிக்கவுள்ளதாகவும் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
இதேவேளை, ஹரீன் பெர்னாண்டோ தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படுவதால், அந்த பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர் தொடர்பில் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக சபை தீர்மானம் எடுக்கும் எனவும் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்தார்.