போராட்டகாரர்கள் காலி முகத்திடலில் இருந்து வெளியேறினர்

0
282

காலி முகத்திடல் போராட்ட களத்தில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக நடிகையும் கோட்டகோகம செயற்பாட்டாளருமான தமிதா அபேரத்ன இன்று தெரிவித்துள்ளார்.

எனினும், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரகலை இன்னும் முடியவில்லை.

“நாங்கள் காலி முகத்திடலில் இருந்து உடல் ரீதியாக வெளியேறினாலும், அரகலயமானது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு ஊழல் அரசியல்வாதிகளுக்கும் எதிராக மீண்டும் எழுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று அவர் கூறினார்.

காலி முகத்திடலில் போராட்டம் நடத்தப்பட்டு இன்றுடன் 123 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த இடத்தில் இருந்த கூடாரங்களை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here