பொரளை சிறிசர உயன மைதானத்தில் கடந்த 7 ஆம் திகதி இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு இளைஞரும் உயிரிழந்தார்.
அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர் 23 வயதான இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, இந்த சம்பவத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்தனர்.