சிறுவர்கள் இடையே டெங்கு மற்றும் கோவிட் தொற்று அதிகரிப்பு – வைத்தியர்கள் எச்சரிக்கை

Date:

கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ,டெங்கு வைரஸ் மற்றும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 51 சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 11 சிறுவர்கள் கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெறுவதுடன் அதில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் வீடு, பாடசாலை உள்ளிட்ட சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறும், பெற்றோர் பிள்ளைகளை கவனமாக பாதுகாக்குமாறும் வைத்தியர தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

குழந்தைகள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுவதை தடுக்க அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...

அரசியல் + பாதாள உலகம்! சிக்கும் முக்கிய புள்ளிகள்

போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் பலமானதாக எதிர்வரும் 30 ஆம் திகதி...

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி,...