ஹொரணையில் புதிய சிறைச்சாலை

0
81

வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியின் வர்த்தகப் பெறுமதி 32 பில்லியன் ரூபா என நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு ஹொரணையில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 200 ஏக்கர் காணி சிறைச்சாலை திணைக்களத்திற்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹொரணையில் சிறைச்சாலை அமைப்பதற்கான செலவை 18 பில்லியன் ரூபாவுக்கு மிகாமல் திட்ட அறிக்கைகளை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“சர்வதேச டெண்டர் அழைப்பின் மூலம் அனைத்து நவீன வசதிகளுடன் திட்டத்தை முடிக்க நாங்கள் நம்புகிறோம். புதிய சிறை தற்போது இருக்கும் சிறையை விட நான்கு மடங்கு பெரியது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தவிர, திறந்தவெளி சிறைச்சாலை முறையை மேம்படுத்துவதற்கும், சிவில் குற்றவாளிகளுக்கு புவிசார் குறியிடல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here