இனிமேல் சுழற்சி முறையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை

Date:

நிலவும் வறட்சியுடனான வானிலையால் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் மேட்டு பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக மத்திய நிலையங்கள் காணப்படுகின்ற நிலையில், 20 மத்திய நிலையங்களில் சுழற்சி முறையில் நீர் விநியோகிக்கப்படுவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர், பொறியியலாளர் அனோஷா களுஆராச்சி தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் வறட்சியுடனான வானிலையால் 13 மாவட்டங்களை சேர்ந்த 1,66,000-இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களும் ஹம்பாந்தோட்டை, பதுளை, நுவரெலியா, மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...

குண்டுத் தாக்குதல்கள் கதை பொய்

கொழும்பு உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தத் தயாராக...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...