புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்வைத்த பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.
அரசியலமைப்பு சபை இன்று (12) கூடியபோது இது நடந்தது.
அதன்படி, நாட்டின் 37வது பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட உள்ளார்.