சென்னை விமான நிலையத்தில் இலங்கை பெண்ணின் நகைகளை திருடிய இருவர் கைது

Date:

சென்னை விமான நிலையத்தில் இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்மை சுங்க அதிகாரிகளாக அடையாளப்படுத்தி இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து கடந்த திங்கட்கிழமை சென்ற 47 வயதான பெண்ணிடமிருந்தே நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் சென்னை விமான நிலையத்தினை சென்றடைந்த உடன் 31 மற்றும் 40 வயதுடைய இரு இலங்கையர்கள் தங்களை சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகை மற்றும் வளையல்களை இருவரும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது சந்தேகமடைந்த பெண் சுங்கத்துறைக்கு சென்று அவர்கள் மீது புகார் அளித்த நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...