ஜேவிபி.யுடன் சேர்ந்து பண முதலீடு? விசாரணை கோரும் டிரான் அலஸ்

0
270

முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ தெரிவித்த கருத்து தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (15) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

12.08.2023 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் துமிந்த நாகமுவ, ஜனதா விமுக்தி பெரமுனவுடன் இணைந்து டிரான் அலஸ் ஐரோப்பாவில் உள்ள ஒரு தீவு ஒன்றில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதன்படி, இந்த அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி டிரான் அலஸ் இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அங்கு பொதுபாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பதவி வேறுபாடின்றி சட்டத்தை அமுல்படுத்துமாறு தான் எப்போதும் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இந்த சந்தர்ப்பத்திலும் அது நடைமுறைப்படுத்தப்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான குற்றச்சாட்டுகளின் உண்மை மற்றும் பொய்மையை மக்கள் விரைவில் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here