Saturday, October 5, 2024

Latest Posts

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 54 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 230 ரக விமானம் மூலம் 54 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து குவைத்தில் வேலைக்குச் சென்று  சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் திரும்பி வந்துள்ளனர்.

53 பெண்களும் ஒரு ஆணும் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இவர்கள் செல்லுபடியாகும் வீசா காலத்தை தாண்டி குவைத்தில் தங்கியிருப்பது, பணியிடத்தை விட்டு ஓடி, வேறு இடங்களில் வேலை செய்தல் போன்ற காரணங்களால் நாட்டுக்கு வர முடியாமல் தவித்தவர்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பணியகத்தின் தலைவர் ஏ.எம்.ஹில்மி, பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள தொழிலாளர்களை அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தூதரகங்களின் தொழிலாளர் நலன் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் அவர்கள் இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குவைத் தூதரகத்தில் பதிவு செய்து குடிவரவுத் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இது தொடர்பான தகவல்களை சமர்ப்பித்து ஒரு நாளில் குறித்த நபர்களை குவைத் தூதரக அதிகாரிகள் நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.