ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கமுனுபுர சந்தி பகுதியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீபுர, கவுந்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றதாகவும், சுடப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
T56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.