நாகப்பட்டினம்- காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை இன்று ஆரம்பம்!

Date:

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவை இன்று (16) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி ‘சிவகங்கை’ பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

அதற்கமைய அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நாகப்பட்டினம் முதல் காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...