சீனக் கப்பலை வரவேற்க பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை முற்றிலும் தேவையற்றது

0
194

ஹம்பாந்தோட்டையில் சீனக் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பது குறித்து SLPP பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீன ஆராய்ச்சிக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வருவதில் பல சிக்கல்களுக்குப் பிறகு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

சீனாவினால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக சீனக் கப்பல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வந்து, ஆகஸ்ட் 17ஆம் தேதி புறப்படத் திட்டமிடப்பட்டது.

எவ்வாறாயினும், அம்பாந்தோட்டையில் கப்பலை நிறுத்துவது தொடர்பாக இந்தியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் கப்பல் வருகை தாமதமானது

‘யுவான் வாங் 5 கப்பல் நேற்றைய தினம் வருகை தந்ததைத் தொடர்ந்து, கப்பலை வரவேற்கும் நிகழ்வில் பல அரசாங்க மற்றும் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதை காணமுடிந்தது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான சரத் வீரசேகர, விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த SLPP பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், இது “முற்றிலும் தேவையற்ற” தலையீடு என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here