சட்டவிரோத குடியேற்ற முயற்சியை முறியடித்த கடற்படையினர்

0
76

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (16) இரவு தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கத்துடன் இலங்கை கடற்படையானது தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய வழமையான செயற்பாடுகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here