ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழர்களின் நிலைப்பாடு என்ன? தமிழரசின் எம்.பிக்களிடம் வினவிய இந்தியத் தூதுவர்

Date:

வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடு என்னவென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வினவினார் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கும், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்தியத் தூதுவர் மேற்படி கேள்வியைத் தொடுத்தார்.

அத்துடன் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பிலும், அது குறித்து தமிழ் மக்களின் நிலைப்பாடு பற்றியும் இந்தியத் தூதுவர் வினவினார்.

இதன்போது தாம் பொதுவான கருத்துக்களைத் தெரிவித்தோம் என்று சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களின் தமிழ் மக்கள் தொடர்பான உறுதிமொழிகள் குறித்தும் தம்மிடம் இந்தியத் தூதுவர் கேட்டறிந்தார் என்றும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் குறிப்பிட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...

குண்டுத் தாக்குதல்கள் கதை பொய்

கொழும்பு உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தத் தயாராக...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...