ஓமந்தை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி

0
675

வவுனியா, ஓமந்தை A9 வீதியில நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்து, 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கண்டியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றுக்கு சென்று அங்கிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த மகேந்திரா ரக வாகனம் ஓமந்தை, ஏ9 வீதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியதுடன், எதிரே வந்த கனரக வாகனத்துடனும் மோதி விபத்துக்குள்ளாகியது.

விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here