ஜனாதிபதி ரணில், சிரச உரிமையாளர் சசி ஆகியோரிடம் சிஐடி விசாரணை

0
101

சிரச நியூஸ் ஃபர்ஸ்ட் உரிமையாளரான கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் சசி ராஜமகேந்திரனிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுமார் எட்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு எதிர்ப்பாளர்கள் சிலர் தீ வைத்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஜனாதிபதி ரணிலிடமும் வாக்குமூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here