குத்தகைக்கு வாகனம் வாங்கி போலி ஆவணத்தில் விற்பனை! மாட்டிய கும்பல் கைது

0
166

வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடம் வாகனத்தை வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 36 மற்றும் 46 வயதுடைய 2 ஆண்கள், 36 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் விற்பனை செய்து அடகு வைத்த மேலும் 2 கார்களையும் பொலீசார் மீட்டுள்ளனர். 2 போலியான ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் போலி துறைமுக ஊழியர் அடையாள அட்டை உட்பட பல போலி ஆவணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here