Tuesday, September 10, 2024

Latest Posts

இலங்கை மக்களை காப்பாற்றியது இந்தியாவே ! ரணில் அல்ல – மனோ

 இலங்கை ரூபா பெறுமதியில், 120,000 இலட்சம் ரூபாய்களுக்கு நிகரான, 400 கோடி அமெரிக்கா டாலர் தொடர் கடன் (Indian Credit Line) நிதி உதவியை இந்திய அரசு தந்ததால்தான், பெட்ரோல், உணவு, காஸ், மருந்து வரிசைகள், மின்வெட்டுகள், உர தட்டுபாடு ஆகியவற்றில் இருந்து எமது நாடு காப்பாற்ற பட்டது.

இந்த உண்மையை மறைத்து ரணில் விக்கிரமசிங்க நரித்தனமாக பேசி தெரிகிறார். இலங்கைக்கு இந்திய அரசின் தொடர் கடன் (Indian Credit Line) நிதி உதவி வழங்க வேண்டும் என இந்திய அரசு, 2021ம் வருடம், டிசம்பர் மாதம், கொள்கைரீதியாக முடிவு எடுத்தது. இவை ரணில் ஆட்சிக்கு வர முன்னர் தீர்மானிக்க பட்டவை. அதன் பிறகு, 2022ம் வருட மே மாதம் பிரதமராகவும், ஜூலை மாதம் ஜனாதிபதியாகவும் ரணில் பதவிகளை ஏற்றார். ரணில் பதவிக்கு வந்து இவற்றை பயன்படுத்தினார்.

ரணில் பதவிக்கு வந்து சுய முயற்சியால் இவற்றை கொண்டு வரவில்லை. இந்த உதவிகள் இந்திய அரசு, இலங்கை மக்களுக்கு, இலங்கை நாட்டுக்கு வழங்கிய பெரும் உதவிகளாகும்.இதனாலேயே, இந்நாட்டில் அத்தியாவாசிய பொருள் வரிசைகள் நின்றன. மின் வெட்டு நின்றது. விவசாயத்துக்கு தேவையான உரம் கூட ஓமன் நாட்டில் இருந்து இந்திய கடனுதவி நிதி மூலம் பெற இந்திய அரசு அனுமதி தந்தது. இதுதான் உண்மை.

இதை மறுக்க முடியுமா என சரடு விடுபவர்களுக்கும், உண்மை தெரியாமல் பேசி திரிபவர்களுக்கும் நான் சவால் விடுகிறேன் என, மாவனல்ல, ருவன்வெல்ல ஆகிய இடங்களில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாச பிரசார கூட்டங்களில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். 

மனோ கணேசன் எம்பி மேலும் கூறி உள்ளதாவது;

 இந்திய தேசம்தான், எமது நாட்டை காப்பாற்றியது என்ற அடிப்படை உண்மையை மறைத்து தான் ஏதோ நாட்டை காப்பாற்றியது போல் போகும் இடமெல்லாம் ரணில் விக்கிரமசிங்க கூறி வருகிறார். இந்த பொய்யை அவரது எடுபிடிகளும் கூறி வருகிறார்கள். நாட்டில் ஒரு தரப்பினர் உண்மை தெரியாமல் இதை நம்புகிறார்கள்.  இலங்கை ரூபா பெறுமதியில், 120,000 இலட்சம் ரூபாய்களுக்கு நிகரான 400 கோடி அமெரிக்கா டாலர் தொடர் கடன் (Indian Credit Line) நிதி உதவியை இந்திய ஒன்றிய அரசு எமது நாட்டுக்கு வழங்கியது.

அதேபோல் 400 கோடி இலங்கை ரூபா பெறுமதியான உணவு பொருட்களை இந்திய தமிழ்நாடு மாநில அரசு எமக்கு வழங்கியது. இவற்றால்தான்தான் எமது வரிசைகளில் நீங்கின. இவை ரணில் ஆட்சிக்கு வர தீர்மானிக்க பட்டவை. இந்த உதவிகள் இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை மக்களுக்கு, இலங்கை நாட்டுக்கு வழங்கிய பெரும் உதவிகளாகும். ரணில் பதவிக்கு வந்து அவற்றை பயன்படுத்தினார். ரணில் பதவிக்கு வந்து சுய முயற்சியால் இவற்றை கொண்டு வரவில்லை. ஆனால், இவை தனது சாதனைகள் என ரணில் வழமை போல் நரித்தனமாக கூறி வருகிறார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.