போதை கடத்தல், பாதாள குழு உறுப்பினர்களுக்கான எச்சரிக்கை

0
242

அனைத்து வகையான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு தனித்துவமான, பாரிய நடவடிக்கையை முன்னெடுக்க பாதுகாப்புப் படையினர் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் வர்த்தகம் முதல் பாரிய போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் முதல் கொலை வரையிலான பாதாள உலகச் செயற்பாடுகள் தற்போது அமோகமாக இடம்பெற்று சமூகப் பேரழிவை நோக்கித் தள்ளுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் மறைந்திருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் சர்வதேச ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே ஏராளமான தகவல்களை சேகரித்துவிட்டதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here