பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Date:

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று காலை முச்சக்கர வண்டியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொருவரின் நிலை தற்போது சீராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கல்கிஸ்ஸை, டெம்பிள் வீதியைச் சேர்ந்த ஷெஹான் துலான் பெரேரா (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்த இளைஞர், பொரலஸ்கமுவ பரலாஸ் மைதானத்தில் இசை நிகழ்ச்சியைக் கண்டு வீடு திரும்புவதற்காக மற்றொரு குழுவுடன் மாலனி புலத்சிங்கள மாவத்தை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​முச்சக்கர வண்டியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இசை நிகழ்ச்சியின் போது அந்த இளைஞருடன் மோதிய ஒரு குழுவிற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்...

ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில்...

விமலுக்குப் பிணை

தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில்...

விமல் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக...