வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

0
251

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இன்றைய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட வைத்தியர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறைந்தது இன்னும் இரண்டு நாட்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

இனி சிறைச்சாலையில் உள்ள ஒரு கைதி அல்ல என்றும், அதாவது அவர் இப்போது தனது சொந்த மருத்துவரை சந்திக்க முழு சுதந்திரம் பெற்றுள்ளார்.

இதயத்தில் உள்ள நான்கு குழாய்களில் மூன்று அடைபட்டுள்ளதாகக் கூறினார். அவருக்கு மேலும் சிகிச்சை தேவைப்படும், ஒருவேளை அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அந்த அறுவை சிகிச்சை இப்போது அவசரநிலை அல்ல. ஆனால், அது அவரது சொந்த நலனுக்காக விரைவில் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், ஆபத்துகள் இருக்கலாம். அந்த ஆபத்துகளைத் தவிர்க்க விரைவாகச் செல்வது நல்லது,” என்று அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி இத்தகைய நோய் நிலைமைகளுக்கு மத்தியில் நாட்டை ஆட்சி செய்தாரா என்பது குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்.

“நாட்டை ஆள மூளை மட்டுமே தேவை. ரணில் விக்கிரமசிங்க தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வாய்ப்பை உருவாக்கியவர்களுக்கு அவர் நன்றி சொல்ல வேண்டும். தேவையான சிகிச்சையுடன், அவர் புதிய வாழ்க்கையைப் பெறுவார், மீண்டும் இளமையாக இருக்க முடியும். “எனக்குத் தெரிந்தவரை, அவருக்கு இது நடந்தது உண்மையில் ஒரு நல்ல விஷயம்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here