உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மாம்பழம் ஒன்று 162000 ரூபாய்க்கு ஏலத்தில்

0
215

வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

உக்குளாங்குளம் தொடர்ந்து சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06 ஆம் நாள் மாம்பழ திருவிழா நேற்று மாலை (26) விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சிக்காக ஏலத்தில் விடப்பட்டது.

இதன்போது, பலத்த போட்டிக்கு இவ் மாம்பழத்தை வவுனியா – உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர் 162,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here