கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவிற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம்

0
97

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவிற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேவையான அறிவிப்புகள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் மற்றும் சட்டத்தரணி நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சட்ட மா அதிபர் தினக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சமர்ப்பித்த இடைக்கால இழப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் இந்த இழப்பீடு பெறப்படவுள்ளது.

கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் இடைக்கால நட்டஈடாக 890 இலட்சம் டொலர் மற்றும் 16 மில்லியன் ரூபா கோரப்படுவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளார்.

இடைக்கால இழப்பீட்டை வழங்குவதற்கு கப்பல் நிறுவன காப்புறுதி நிறுவனமும் சட்டத்தரணிகள் நிறுவனமும் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தன.

அது தொடர்பான அரசாங்கத்தின் இணக்கப்பாட்டை அந்த நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் கூறியுள்ளார்.

அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானம், இரு தரப்பினரும் இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here