ராஜித அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில்

0
417

நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாகி இருந்த முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (29) ஆஜரானார்.

அவரை, அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, வௌ்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் வேண்டுகோளின் மேல் நீதிமன்றத்தால் இன்று (29) காலை  விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்த குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளார்.

கிரிந்த மீன்வள துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு இருநூறு மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here