2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (30) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பாரம்பரியத்தின் படி, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்டுள்ள தனித்துவமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இவ்வாறு திருத்தப்படவுள்ளது.
மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுடன் அரச வருமானத்தை அதிகரிப்பது தொடர்பிலான வரி திருத்தங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.