இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இணைந்து கொண்ட சீனாவின் சினோபாக் நிறுவனம், கொட்டாவ மத்தேகொடவில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்துள்ளது.
கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ளுர் முகாமையாளர் இயங்கி வந்த எரிபொருள் நிரப்பு நிலையம் சினோபாக் நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் மாற்றப்பட்டது.
எதிர்காலத்தில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் Sinopac நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு எரிபொருள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும்.
அத்துடன் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அவர்கள் செயற்படுத்தவுள்ளனர்.