Tuesday, September 10, 2024

Latest Posts

பிரியாணி வழங்கவிருந்த ரணிலின் தேர்தல் மேடையில் திடீர் சோதனை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, கம்பளை, போத்தலப்பிட்டியில் அமைந்துள்ள நிகழ்வு மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது, ​​தமது ஆதரவாளர்களுக்கு உணவு வழங்கி உபசரிக்க தயாரா இருந்தனர்.

இதேவேளை , ​​கண்டி உதவி தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நிகழ்வை இரத்துச் செய்ததுடன், உணவுப் பொருட்களில் ஒரு பகுதியையும் அவர்கள் காவலில் எடுத்து கம்பளை பொலிஸ் நிலையத்திற்க்கு கொண்டு சென்றனர்.

திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கு பிரியாணி வழங்க தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த புகாரின் பேரில் அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
1500 ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட உணவில் இருந்து, பெரிய தொட்டிகளில் குறித்த இடத்திற்கு கொண்டு வரப்பட்ட கத்தரி மோஜு, சட்னி மற்றும் கறி ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி, மஹிந்தானந்த அளுத்கம, நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, சாந்தினி கொங்கஹா, வேலு குமார் கம்பளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் சமந்த அரண குமார உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவர்கள் வருவதற்கு முன், தேர்தல் ஆணையக அதிகாரிகள் வந்து, இந்த உணவை தங்கள் காவலில் எடுத்துச் சென்றனர்.

இது ஜனாதிபதி தேர்தலின் போது நடந்த முதல் சோதனை (Raid) என்று கூறப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.