இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5 குற்றவாளிகள் தொடர்பில் இன்று (31) நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான உத்தரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த, பாணந்துறை நிலங்கா ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தெம்பிலி லஹிரு, பாக்கோ சமன் ஆகியோர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்தோனேஷிய பொலிஸார் இணைந்து நடத்திய ஒன்றிணைந்த சர்வதேச சுற்றிவளைப்பின் மூலம் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றவாளிகள் இந்தோனேஷியாவில் நேற்று முன்தினம்(29) கைது செய்யப்பட்டனர்.