முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பரில்

0
283

இலங்கை மற்றும்  பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் திகதி நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 7 ஆம் திகதி வரும் நிகினி போயா நாளில் இரவு 8.58 மணி முதல் 8 ஆம் திகதி அதிகாலை 2.25 மணி வரை சுமார் 5 மணி நேரம் 27 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணத்தைக் காண ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து செல்வதாலும், பூமியின் இருண்ட நிழல் வழியாக சந்திரன் கடந்து செல்வதாலும் சந்திரன் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் இருட்டாக இருக்கும் எனவும் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன சுட்டிகாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here