திகதி மாற்றம் செய்த ஐதேக

0
190

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழாவை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

கொழும்பில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல தெரிவித்தார். 

ஒத்திவைக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழாவை இந்த மாதம் வேறு ஒரு நாளில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மேலும் தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here