அதிகரிக்கப்பட்ட கேஸ் விலை விபரம்

0
77

லிட்ரோ கேஸ் நிறுவனம் அதன் விலைகளை திருத்தியுள்ளது. புதிய விலைகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் புதிய விலை ரூ.3,127. இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,256 ரூபாவாகும்.

2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 587 ரூபாவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here