டிசம்பர் 31இல் சுமார் 20,000 அரச ஊழியர்கள் வீடு செல்ல உள்ளனர்!

0
313

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக குறைக்க முன்மொழிந்தார்.

இந்த முன்மொழிவின்படி, டிசம்பர் 31ம் திகதிக்குள் 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெற வேண்டும்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்று நிருபம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே கூறுகிறார்.

எவ்வாறாயினும், 60 வருட வரம்பு பல அத்தியாவசிய தொழில்களைச் சேர்ந்த அரச ஊழியர்களை பாதிக்காது என்றும் செயலாளர் குறிப்பிடுகிறார்.

வைத்தியர்கள், தாதியர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களுக்கு அத்தியாவசிய சேவை அடிப்படையில் 63 வருடங்கள் வரை அரச சேவையில் இருக்க வாய்ப்பு வழங்கப்படுவதுடன் அது தொடர்பான திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அரச சேவையை முடிந்தவரை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்கேற்ப ஓய்வு பெறும் வயதைக் குறைக்கவும் தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here