சர்வதேச நாணய நிதியத்தின் புதிய அறிவிப்பு

Date:

எதிர்வரும் டிசம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் நிதி உதவியை இலங்கை அரசாங்கம் பெறும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், டிசம்பரில் பெறப்படும் முதல் நிதி உதவி சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள 3 பில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியிருந்தது.

நீண்ட இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஊழியர் மட்ட உடன்படிக்கை செய்து கொண்டது.

இதன்படி, நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டது.

இது நான்கு வருட வேலைத்திட்டத்திற்கு உட்பட்டு இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதியாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...