புதுக்கோட்டை மீனவர்கள் நால்வர் கைது

0
123

தஞ்சாவூா் மாவட்டத்தை சோ்ந்த மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை மாலை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து புதன்கிழமை காலை 167 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

இதில், கோட்டைப்பட்டினம் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான படகில், தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினத்தைச் சோ்ந்த தினேஷ் (35), முரளி (32), செல்வம் (40), விஸ்வநாதன் (40) ஆகிய 4 பேரும் நெடுந்தீவு அருகே புதன்கிழமை மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 பேரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனா்.

அவா்களை இலங்கை காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here