சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வெற்றிக்கிண்ண சின்னத்துடன் கூடிய புதிய கூட்டணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் இன்று (05ஆம் திகதி) ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் தினேஷ் குணவர்தனவும், செயலாளராக அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவும் கடமையாற்றுகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மக்கள் ஐக்கிய முன்னணி, ஐக்கிய மக்கள் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தேசிய காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய ஐக்கியக் கட்சி மற்றும் தேசப்பற்றுள்ள மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.