மதுபானசாலைக்கான அனுமதி விவகாரம்: உண்மையை ஒப்புக் கொண்டார் அங்கஜன்

0
153

”மதுபான சாலைகளுக்கான அனுமதியினை தனது தந்தைபுதிதாக பெறவில்லை எனவும், இருந்த அனுமதியினை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கும் முகமாக வழங்கிய ஆவணங்களே அவை எனவும் ” நாடளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மதுபானசாலைக்கான அனுமதி விவகாரம் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எனது அப்பா ஒரு தொழிலதிபர். நான் அரசியலுக்கு வர முன்னரே தொழிலதிபராக இருக்கிறார். 70 ஆண்டுகளில் இருந்து அவர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கொழும்பில் 92ஆம் ஆண்டு காலங்களில் மதுபான சாலை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவரிடம் சில மதுபான சாலைகளின் அனுமதிகள் இருந்தன. அவற்றினை புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டார். புதிதாக அனுமதி பெறவில்லை.

எங்களுக்கு புதிதாக யாரும் தர வேண்டிய தேவை இல்லை. எனது அப்பாவிடம் அனுமதிகள் ஏற்கனவே இருந்தன. அப்பா மீது குற்றம் சாட்டிய நபருக்கும் தெரியும் எனது அப்பாவிடம் மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் இருக்கின்றன என்ற விடயம். தெரிந்தே அவர் குற்றம் சாட்டியுள்ளார் ”இவ்வாறு அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here