எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு சமகி ஜன பலவேகவின் விஞ்ஞாபனத்தில் பலமான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்பு முக்கியமானது மற்றும் இந்த தொழிலாளர்கள் சிரமங்களை மீறி நிறைய வேலை செய்கிறார்கள். அதன்படி, பணியிடத்தில் அவர்கள் செய்யும் உன்னத பணிக்கு, தனியார் துறையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 25000 வரை கொண்டுவருவதற்கான விதிமுறைகள் தயாரிக்கப்படும் என்றும், ஊழியர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ஊழியர் சாசனம் தயாரிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
சமகி ஜன பலவேக தெளிவான வேலைத்திட்டத்தையும் தத்துவத்தையும் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் குறுஞ்செய்திகள் மூலம் பல விடயங்களை மக்களுக்கு அனுப்பி வருவதாகவும் சமகி ஜன பலவேகவின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சமகி ஜன பலவேகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ள இவ்வேளையில் ஜனாதிபதியும் ஜனதா விமுக்தி பெரமுனவும் ஒன்றிணைந்து பேஸ்புக் மற்றும் இணையத்தளங்களில் பணம் செலுத்தி போலியான செய்திகளை உருவாக்கி சமகி ஜன பலவேக மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றுபடும் என்றும் செய்தி பரப்பப்படுகிறது.
ஜனாதிபதிக்கும், திசைகாட்டி தலைவருக்கும் ஒன்றிணைய ஆசை இருப்பதாகவும், அவர்கள் ஒன்றிணைந்தாலும், நாம் இந்த கும்பல்களுடன் இணைய மாட்டோம் எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த கொள்கை, சிறந்த தத்துவம் மற்றும் வேலைத்திட்டம், தம்மிடம் இருப்பதாகவும் மற்றும் அனுபவமும், அறிவும் உள்ள திறமைசாலிகள், மற்றும் சமகி ஜன பலவேகவின் தொலைநோக்குப் பார்வை, இந்த நாட்டைச் சரிவில் இருந்து வெளியே கொண்டுவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பாடசாலையையும் நட்புறவுப் பாடசாலையாக மாற்றுவதன் மூலம் கல்வியை வலுப்படுத்துவதாகவும், இந்தப் பொறுப்பை சமகி ஜன சந்தன நிறைவேற்றும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
காலியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.