நுவரெலியா மீபிலிமான பிரதான வீதியில் பாரிய மண்சரிவு – போக்குவரத்து முற்றாக தடை

Date:

நுவரெலியா மீபிலிமான பிரதான வீதியில் இன்று (06) காலை நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவான்எலிய பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – பட்டிப்பொல, அம்பேவெல போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்தன.

இதனால் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமாகியிருந்தன.

இதனையடுத்து, நுவரெலியா வீதி அதிகார சபை ஊழியர்கள், நுவரெலியா இராணுவத்தினர், நுவரெலியா பொலிஸார் ஆகியோர் இணைந்து மண்மேட்டை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் ஒரு வழி போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுகின்றது. அத்தோடு, இவ்வீதிகளில் பல இடங்களில் ஆங்காங்கே மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வீதிகளின் ஊடாக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

மேலும் சரிந்து விழுந்துள்ள மண் மேடுகளை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் சாரதிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...

ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா?

டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...