வவுனியா, மாங்குளத்தில் நேற்று (செப். 05) மாலை கண்ணிவெடி வெடித்ததில் நான்கு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, காயமடைந்த பெண்கள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் முதலில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை துணுக்காய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.