சஜித் ஒரு கோழைத்தன தலைவர்

0
179

கோழைத்தனமான தலைவர்களுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தினால் கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதாக ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“செப்டம்பர் 21 இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள். அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் இதுபோன்ற முடிவை எடுக்கும்போது நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் தவறு செய்தீர்கள். கடந்த 76 ஆண்டுகளாக, உலகில் மற்ற நாடுகள் முன்னேறிச் செல்லும் போது, நம் நாடு பின்னோக்கிச் சென்றது. அதுதான் நீங்கள் நியமித்த ஆட்சியாளர்களின் திறமை. ஆட்சியாளர்கள் தேர்தலுக்கு வந்து உங்களையெல்லாம் ஏமாற்றிவிட்டார்கள். அதன் காரணமாகவே நான் இப்போது சுதந்திரமடைந்தேன்” என பொன்சேகா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here