ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்கான சதித்திட்டம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய இரகசிய தகவலையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
தகவல் கொடுத்தவரிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லுமாறும் சந்தேக நபர்கள் யாரேனும் அடையாளம் காணப்பட்டால் அவர்களைக் கைது செய்யுமாறும் பிரதான நீதவான் திலின கமகே பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான மிக ரகசிய அறிக்கை செப்டம்பர் 2ஆம் திகதி நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்டது.