பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இடமிருந்து தலா 170 மில்லிகிராம் ஜஸ் எனும் போதைப் பொருள் கைபற்றபட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய வீதி தடைகளை அமைத்து மேற்கொண்ட சோதனையின் போது முச்சக்கர வண்டியில் சென்ற சந்தேகபட்ட இருவரும் கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கிறார்கள்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தலா 170 மில்லிகிராம் ஜஸ் எனும் போதைப் பொருள் கைபற்றபட்டுள்ளது.
பொகவந்தலாவ சிரிபுர பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் பொகவந்தலாவ செப்பல்டன் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் அடங்கலாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.