பாஸ்போர்ட் வரிசை – பின்னணியில் மாஃபியா

0
43

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக காணப்பட்ட நீண்ட வரிசையின் பின்னால் மாஃபியாவொன்று செயற்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக குடிவரவு திணைக்கள அலுவலகங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

தேசிய மக்கள் சக்தி இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துத் தெரிவித்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ்,

பாஸ்போர்ட் இல்லாததால் மாத்திரம் வரிசை ஏற்படவில்லை. அரசாங்கம் ஒன்லைன் சந்திப்புக்களை முதலில் ஆரம்பித்த நிலையில் சில நிமிடங்களில் அனைத்தும் முடிந்தன. பின்னர் அவை சிலரால் 45 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டதாக அறியக்கிடைத்தது. இதனை அறிந்து ஒன்லைன் சந்திப்பை உடனே நிறுத்த நடவடிக்கை எடுத்தோம். பின்னர் வரிசையில் வரும் படி கூறினோம். அப்போது வரிசையிலும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்கப்பட்டுள்ளது. அதன்பின்தான் பொலிஸாருக்கு இதனை பொறுப்பேற்க கூறினோம். என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here