பெண்கள் புறக்கணிப்பு – சந்திரிக்கா குற்றச்சாட்டு

0
45

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவுடன் தேர்தலில் பெண்களுக்கான இருபத்தைந்து வீத ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளும் மாநாடு கொழும்பில் இடம்பெற்றதுடன், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பெண்களுக்கான குறைந்தபட்சம் 40% பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்திலும் ஏனைய நிறுவனங்களிலும் பிரதிநிதித்துவம் கோரி இந்நாட்டு பெண்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here